First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இந்தியா முழுவதும் லாரி ஸ்டிரைக் - விடுதலைப்புலி பிரபாகரனை பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி காங்கிரஸ் கோரிக்கை - ஆனையிறவை சிங்கள ராணுவம் கைப்பற்றியது: , முல்லைத்தீவில் ராணுவம் விமானத்தாக்குதல் - தலை, கழுத்து புற்றுநோயிற்கு சிங்கப்பூரில் மருந்து கண்டுபிடிப்பு - விடுதலைப்புலிகள் வெற்றிபெறுவர் என வைகோ முழக்கம்
படைப்புக்கும், படைப்பாளிகளுக்கும் சம்பந்தமேயில்லாமல் 'திடீர்' சேகுவாராக்கள் உருவாகிக் கொண்டிருக்கிற தமிழ்சினிமாவில், படைப்பை போலவே பேச்சும், பேச்சை போலவே படைப்பையும் கொண்டிருக்கிறார் கௌதமன். கத்தியின் வலிமையும், பிளேடின் கூர்மையும் இருக்கிறது அவரது பேச்சில்! ஆட்டோ சங்கர், சந்தனக்காடு என்று தொலைக்காட்சி வரலாற்றில் புதிய வாள்வீச்சை நடத்திக் கொண்டிருக்கிற
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை தமிழக முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான எம்.ஜி.ஆர். எதிர்த்ததால் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியால் மிரட்டப்பட்டார் என்று அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன் தெரிவித்துள்ளார்.
பெயர்தான் பெரியார் திடல். ஆனால், பெரியார் என்ற முத்தை தன்னகத்தே கொண்டுள்ள கடல் அது! அங்கே அய்யாவின் கனவை நிறைவேற்றும் நவீன தொழிற்சாலையாக பணிகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் அவரின் பக்தர்கள். அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக அய்யாவின் கொள்கைகளை பாதுகாத்துக் கொண்டிருக்கிற திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்களை சந்திக்க காத்திருக்கிறோம். ஐந்து நிமிடத்தில் தரிசனம் கொடுக்கிறது அந்த கருப்பு சூரியன்! எல்லா கேள்விகளுக்கும் முகம் சுளிக்காமல் வந்து விழுகின்றன கூர்மையான பதில்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டின். பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவருடைய ஆங்கில புலமைக்கு டெல்லியே அடிமையாக இருந்த காலமெல்லாம் உண்டு. மிகச்சிறந்த பேச்சாளர். ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காயமடைந்தவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரான இவரை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்
மாநிலத்திலேயே முதலிடத்தில் வந்த மாநகராட்சி பள்ளி மாணவன் மாதிரி, எளிமையும் பெருமையாக நிற்கிறது அந்த வீடு! கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைகிறோம்... குரல்வளைக்கு குறிவைக்கும் டாபர்மேன்கள் இல்லை. யாரது? போன்ற தோரணையான கேள்விகள் இல்லை. 'உள்ளே வாங்க' என்று அழைத்தது பழ.நெடுமாறனின் குரலேதான். அறையெங்கும் கலைந்து கிடக்கும் புத்தகங்களுக்கு நடுவில் பேட்டி துவங்குகிறது.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter