அசாத்திய வலிமையுடைய குதிரைகள்தான் அவை இரண்டும். நீண்ட பாதையில் தனது பயணத்தை துவங்கிய இந்த இரண்டு குதிரைகளும், திடீரென்று ஓரிடத்தில் பாதை புலப்படாத போது சற்றே திகைத்தன. நல்லவேளையாக ஒரு பொக்லைன் போல் வந்து அகலமான பாதையை உருவாக்கி கொடுத்தது வலிமையான கரம் ஒன்று. இனி இந்த குதிரைகள் தங்கள் சீரான பயணத்தை மட்டுமல்ல, ஜோரான பயணத்தையும் தொடரலாம்.
அந்த பொக்லைன் கைகள் கலாநிதி மாறனுடையது என்றால், குதிரைகள் யாரென்று புரிந்திருக்கும். இந்திய சினிமாவில் பாலிவுட் மார்க்கெட்டுக்கு சற்றும் குறையாத ரஜினி, ஷங்கர் என்ற இருவருக்கும் ஏற்பட்ட சிறு தேக்கத்தை சரி செய்து மீண்டும் எந்திரனை பொலிவோடு உருவாக்க முன் வந்திருக்கும் சன் பிக்சர்சுக்கு ஒரு ரத்தின கம்பள வரவேற்பை கொடுப்போம்.
அதே நேரத்தில் வலிமையான செய்தி நிறுவனங்களை தன்னிடம் கொண்டிருக்கும் சன் பிக்சர்ஸ், எந்திரன் ஸ்டில்களையும், செய்திகளையும் பிற செய்தி நிறுவனங்களுக்கும் பாரபட்சமில்லாமல் வழங்க வேண்டும்! ஊர் கூடி தேர் இழுப்பது அழகு. ரஜினி படங்கள் மீடியாவை பொறுத்தவரை தேரல்லவா? |