|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
பாமக தலைமையில் 3வது அணிக்கு தயார்: டாக்டர் ராமதாஸ் - நிரூபம ராவ், மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு - காமன்வெல்த் போட்டி நாட்களில் டெல்லியை தகர்க்க தீவிரவாதிகள் சதி; அமெரிக்கா புதிய எச்சரிக்கை - ஸ்ரீதேவி படத்தில் நடிக்க அசின் மறுப்பு -
விமர்சனம்

கதை

மோகத்தையும் முள்ளையும் தனித்தனியாக சொல்லியிருக்கிறார் மோகமுள் அபிஷேக்.

புக்கர் பரிசு பெற்ற ஒரு எழுத்தாளனின் மனசுக்குள் இருக்கும் வண்டலு£ர் ஜுவையும், தன் கொடூர பற்களை காட்டி சீறும் சைக்கோ புத்தியையும் பதை பதைக்க படைத்திருக்கிறார் இந்த புதுமுக இயக்குனர். இப்படியெல்லாம் கூட ஒரு எழுத்தாளன் இருப்பானா என்ற சந்தேகம் எழுந்தாலும், இது சினிமாதானே என்று ஜீரணித்து விட்டு போக முடியாதபடி திருப்பி திருப்பி முகத்தில் அறைகிறது க்ளைமாக்ஸ். அன்னிய தேசத்தில் நம் பெண்கள் படுகிற பாட்டை இதில் கொஞ்சம் மிகை படுத்தி சொன்னாலும், நிஜத்திற்கு சூடு அதிகம் என்பதை 100 டிகிரி வெப்பத்தில் உணர வைக்கிறார் அபிஷேக்.

கச்சேரியில் வயலின் வாசிக்கும் நிவேதிதாவை எதிர்மறையாக விமர்சித்தே மனசுக்கு பக்கத்தில் இடம் பிடிக்கிறார் ஷான் குமார். எல்லாரும் ஆஹா ஓஹோ என்று பாராட்டும் போது, இவர் மட்டும் "உங்களுக்கு சங்கீதம்னா என்னன்னு தெரியுமா?" என்று கேட்டு அதிர வைப்பதுதான் ஆபத்தின் துவக்கம். மெல்ல மெல்ல ஷானின் காதலில் விழும் நிவேதிதா, பின்பு இவர்தான் மிகப்பெரிய எழுத்தாளரான நரேன் என்று தெரியவர ஆச்சர்யத்தில் மிதப்பதும், இரண்டே சீன்கள் நகர்வதற்குள் கழுத்தை நீட்டுவதுமாக சராசரி பிளே. அப்புறம்தான் ஷானை பார்த்து "எலேய்..." என்று ரசிகர்களே கொதிக்கிற அளவுக்கு போகிறது விறுவிறுப்பான ஸ்கிரீன் ப்ளே.

தனது மனைவியை துள்ளந் துடிக்க கொடுமைப்படுத்தும் ஷான், ரிலாக்சுக்காக அமெரிக்கா போகலாம் என்று அழைத்து போகிறார் நிவேதிதாவை. "எட்டு மணி நேரத்திற்கு ஒருத்தன் தற்கொலை செஞ்சுக்கிறானாம். சாவுற நேரத்திலே அவனோட வலி எப்படியிருக்கும்? இதை எழுத்தா வடிக்கணும். சாவு" என்று மரணத்தின் விளிம்பிற்கு மனைவியை தள்ளுகிறார். ஆனால் இறந்தது யார்? இதை நோக்கி 100 மைல் வேகத்தில் பறக்கிறது படம். முடிவு... ஷாக்கோ ஷாக்!

இதுதான் முதல் படம் என்கிறார்கள் ஷான் குமாருக்கு. (அப்டீங்களா பிரதர்?) சாந்தம் தவழும் அந்த முகத்தில் அநாயசமாக வந்து உட்கார்ந்து கொள்கிறது கொலை வெறி! கண்களும், உதடும் எமனின் இன்ஷியலாக தெறிக்கிறது மனுஷனுக்கு! தியேட்டர் பக்கம் தனியா போயி சிக்கிக்காதீங்க ராசா...

நான் மட்டும் சளைத்தவளா என்கிறார் நிவேதிதா. கடைசி நிமிட திக்திக் போராட்டத்தில் அவர் கண்களும், உதடும் ஓராயிரம் பக்க வசனங்களை ஒரு வினாடியில் வெளிப்படுத்துகிறது. அதிலும் உயிர் தோழன் அபிநய் திடீரென்று பின்னழகை பற்ற, அதிர்ச்சியுடன் பார்க்கிறாரே, பின்றேம்மா பொண்ணு.

படத்தில் இன்னொரு கேரக்டராக வருவது அபிநய் மட்டுமே. குட்டிம்மா குட்டிம்மா என்று தனது பால்ய கால தோழியை அவர் அழைக்கும் போதெல்லாம் பிரண்ட்ஷிப்புன்னா இப்படியல்லவா இருக்கணும் என்று தோணுகிறது. ஆனால்...

முதல் பாதியில் வந்து கலகலப்பூட்டுகிறார் கஞ்சா கருப்பு. சமீபத்தில் வந்த இவரது ஸோலோ காமெடியில் இது மாஸ்டர் பீஸ்.

சின்னத்திரையிலிருந்து வந்ததாலோ என்னவோ, கேமிரா ஆங்கிள்களை முடிந்தவரை குளோஸ் ஆகவே வைக்கிறார் அபிஷேக். முதல் பாதி திரைக்கதையில் சீரியலை விட சற்றேதான் வேகம். மரணத்தின் வலியை உணர்வது, அதை அப்படியே எழுதுவது என்ற கான்செப்ட் அபத்த களஞ்சியம் என்றாலும், நினைத்ததை தெளிவாக சொல்லியிருப்பதால் பாராட்டுகள்.

எதை எதையோ கதையாக்கும் தமிழ்சினிமாவில், கதையின் கதையையே படமாக்கியிருக்கும் அபிஷேக்குக்கு தக்க சன்மானத்தை வழங்கி மெயின் டோரை திறந்து வைக்கலாம்.

-ஆர்.எஸ்.அந்தணன்

.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter