பக்தி படத்தில் நடித்தால் விரதம் இருப்பதும், குடிகாரன் கேரக்டரில் நடித்தால் நிஜமாகவே சரக்கு அடித்துவிட்டு கேமிரா முன் நிற்பதுமாக கேரக்டரோடு ஒன்றிப் போவதில் நம்ம ஊர் நடிகர் நடிகைகளுக்கு இணை அவர்களேதான். இந்த அநியாய ஈடுபாடு பலரை வியப்படைய வைத்தாலும் சிலரை திகைப்படைய வைக்கும் அல்லவா?
'பத்தாயிரம் கோடி' என்றொரு படத்தை தயாரித்து வருகிறார்கள் கோடம்பாக்கத்தில். மற்றவர்களை ஏமாற்றி பணம் பறிப்பதுதான் இப்படத்தில் வரும் ஹீரோயின் கேரக்டருக்கு. மும்பையிலிருந்து எலினா என்றொரு பதினாறு வயசு சிட்டுக்குருவியை பிடித்துக் கொண்டு வந்திருந்தார் டைரக்டர்.
வரும்போதே ஐந்து லட்சம் அட்வான்ஸ் வேண்டும் என்று வாங்கிக் கொண்டுதான் மேக்கப்பே போடவே ஆரம்பித்தாராம் எலினா. பாண்டிச்சேரியில் முதல் நாள் படப்பிடிப்பு ஸ்மூத்தாக போனது. மறுநாள் யூனிட்டோடு அத்தனை பேரும் பீச்சாங்கரையில் காத்திருக்க, பெண்ணை காணோம்.
ஆள் அம்பேல், ஐந்து லட்சமும் அம்பேல்! போலீசுக்கு போகாமல் தனக்கு தெரிந்த புலனாய்வு டீமை வைத்து சல்லடை போட்டு சலித்துக் கொண்டிருக்கிறாராம் டைரக்டர். |