ஜீவா நடித்துக் கொண்டிருக்கும் 'என்றென்றும் புன்னகை' படத்தில் ஏகப்பட்ட 'உள்ளே வெளியே' சமாச்சாரங்கள்! தன்னை விட வயதில் குறைந்த சிம்புவுடன் நடித்து புரட்சியை ஏற்படுத்திய த்ரிஷா, மீண்டும் ஒரு தொடர் புரட்சி ஏற்படுத்தியிருக்கிறார் இப்படத்தில். ஜீவா மட்டும் த்ரிஷாவை விட சின்னவரா என்ன? ரெண்டு மூணு வயசு குறைந்த ஜீவாவுடன் த்ரிஷா ஆடும் டூயட்டுகள் ராத் து£க்கம் இல்லாமல் செய்யும் என்கிறார்கள் இப்பவே!
அது போகட்டும்... அதென்ன உள்ளே வெளியே?
பொதுவாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் படங்கள் என்றால் அதில் தாமரையின் பாட்டு கட்டாயம் இருக்கும். இந்த படத்திற்கு இசை ஹாரிஸ். ஆனால் தாமரை இல்லை என்கிற அளவுக்கு ஒரே மெத்தனம். டைரக்டர் அகமது பாட்டெழுத அழைக்கும் போதெல்லாம் சொந்தவேலை இருப்பதாக எஸ்கேப் ஆகிக் கொண்டே வந்தார் தாமரை. வேறு வழியில்லாமல் ஓரு குயர் பேப்பரோடு வாலியை சந்தித்து தன் வலியை சொல்லி அழுதார் அகமது. பிறகென்ன? எல்லா பாடல்களும் வாலிக்கே என்றானது நிலைமை.
இந்த நேரத்தில்தான் மீண்டும் ஹாரிசிடம் பேசி உள்ளே வந்துவிட்டார் தாமரை. இப்படத்தில் ஒரு பாடலை மட்டும் எழுதுகிறாராம் அவர். அப்படியே இன்னொரு உள்ளே வெளியே சமாச்சாரமும் இருக்கிறது இப்படத்தில்.
இன்னொரு முக்கிய கேரக்டருக்காக பாலிவுட் நடிகை லிசா ஹெய்டனை ஒப்பந்தம் செய்திருந்தார் டைரக்டர் அகமது. திடீரென்று அவரும் முரண்டு பிடிக்க, ஆன்ட்ரியாவை நாடினாராம். இப்போது லிசா போய் ஆன்ட்ரியா வந்தாச்சு... டும் டும் டும்! |