டைரக்டராக இருக்கிற வரைக்கும் பிரச்சனையில்லை. அவரே மொட்டை போட்டுக் கொண்டாலும் சரி, தயாரிப்பாளருக்கு போட்டாலும் சரி. ஆனால் அவரே ஹீரோவாக இருந்துவிட்டால் ஒரு சிங்கிள் முடியை கூட பிடுங்க யோசிக்க வேண்டும். கண்ட்டினியூடி சம்பந்தப்பட்ட சிக்கல் அது.
அப்படிதான் சமீபத்தில் அமீர் போட்டுக் கொண்ட மொட்டை பலரையும் சிண்டை பிய்த்துக் கொள்ள வைத்திருக்கிறதாம். தனது மதத்தின் மீது தீரா அன்பு கொண்டவர் அமீர். ஐந்து வேளை தொழுகிற அக்மார்க் முஸ்லீம் அவர். சமீபத்தில் மெக்காவுக்கு போய் வந்த அமீர், தனது தலையை மொட்டை அடித்துக் கொண்டு திரும்பியிருக்கிறார். தாடியும் மீசையுமாக இருந்தவர் பிரார்த்தனை நிறைவேறிய பின் வேறு கோலத்தில் திரும்ப, இவரை ஹீரோவாக வைத்து விரைவில் படத்தை ஆரம்பிக்க நினைத்த ஒரு சில இயக்குனர்கள் தடுமாறிப் போயிருக்கிறார்களாம்.
அவருக்கும் ஒரு ரெஸ்ட் வேண்டுமல்லவா? வளரும் வரை காத்திரு! |