கொஞ்சம் அழகாக இருந்து பெரிய இடத்து சிபாரிசும் இருந்துட்டா, ஒட்டகம் கூட விசிலடிச்சு சவுக்யமான்னு கேட்கறது கோடம்பாக்கத்து வழக்கம். ஆனால் இவ்வளவு பில்டப் இருந்தும், ஏனோ ப்ரணிதாவின் கூடாரத்தில் பெரிதாக வாத்திய கருவிகள் ஒலிக்கவே இல்லை. இவ்வளவுக்கும் அவர் அறிமுகமானது சுமார் நடிகருடன் என்றாலும், பிற்பாடு தேறிவிட்டார்.
சகுனி கொடுக்காத கையை நானி கொடுப்பாரா பார்க்கலாம் என்று விமர்சகர்கள் எழுதுகிற அளவுக்கு திடீர் அதிஷ்டம் வந்திருக்கிறது அவருக்கு.
சமீபத்தில் வெளிவந்த ஈ திரைப்படத்தின் மூலம் பி அண்டு சி ஏரியாக்களில் புகுந்துவிட்ட நானி, இன்னும் கொஞ்ச நாளில் தமிழ்சினிமாவில் முக்கிய இடத்தை பிடிப்பார் என்று பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்த நேரத்தில்தான் தனது அடுத்த தமிழ் படத்தில் பிரணிதா இருக்கட்டும் என்று கூறிவிட்டாராம் நானி.
இந்த படத்தை விஷ்ணுவர்த்தனிடம் தொழில் கற்றுக் கொண்ட கோகுல் இயக்குகிறாராம். நானிகிட்ட நாணி கோணியாவது மனசுல இடம் பிடிச்சுருங்க பிரணிதா! |