'பாலக்காட்டு மாதவன்' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறார் விவேக். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நிகழ்ச்சி பிரசாத் லேபில் நடந்தது.
பாக்யராஜ் நடித்த படமான அந்த ஏழு நாட்கள் படத்தின் முக்கியமான கேரக்டர் அல்லவா அது? பாக்யராஜையே விழாவுக்கு அழைத்திருந்தார்கள். அவர் பேச பேச அதை தனது செல்போன் மூலம் அமெரிக்காவிலிருக்கும் விவேக்குக்கு லைவ் செய்தார் அவரது உதவியாளர் 'செல்' முருகன்.
இப்படியெல்லாம் செல் மூலம் உதவுவாருன்னு தெரிஞ்சேதான் 'செல்' முருகன்னு அடைமொழி வச்சாங்களோ? அதிருக்கட்டும்... விழாவுக்கு வருகிற வரைக்கும் இந்த தலைப்பு பற்றி தெரியாதாம் பாக்யராஜுக்கு. திடீரென்று இந்த டைட்டிலை அறிவித்தார்கள். அப்படியே நெக்குருகிப் போன பாக்யராஜ், பிளாஷ்பேக்கில் மூழ்க ஆரம்பித்துவிட்டார். சுமார் ஒரு மணி நேரம் மைக்கோடு குடும்பம் நடத்திவிட்டார் அவர். |