அறிக்கை கொடுக்கிற அளவுக்கு கொண்டுவந்து விட்டுவிட்டார்கள் சில கௌரவமான அழைப்புகளை. வேறொன்றுமில்லை... கல்லூரி விழாக்களில் கலந்து கொள்வதற்காக எந்த நடிகர் நடிகையை அழைத்தாலும் 'எவ்வளவு துட்டு கொடுப்பீங்க?' என்கிறார்களாம். இதைக் கண்டு பொங்கி வெடித்த ஒரு லெட்டர் பேட் அரசியல்வாதி அறிக்கையே கொடுத்துவிட்டார் பத்திரிகைகளுக்கு. 'கல்லூரிகளுக்கு பேச அழைத்தால் பணம் கேட்காதீங்க. அவங்க கொடுக்கிற டிக்கெட் காசுல வளர்ந்த ஆளுங்கதானே நீங்க' என்பதுதான் அந்த அறிக்கையின் சாராம்சம் மற்றும் ஓராம்சம்.
நடிகர் நடிகைகள் சிலரிடம் இது பற்றி விசாரித்தால், ஏதாவது கல்லு£ரிகளில் ஷுட்டிங் நடத்தணும்னு பர்மிஷன் கேட்டுப் பாருங்களேன். ஒரு நாளைக்கு ஒரு லட்சம், ரெண்டு லட்சம்னு பில் போடுவாங்க. அவங்களுக்கு இருக்கிற அதே இருட்டு மனசுதானே இன்னொருத்தருக்கும் இருக்கும்? நாங்க பணம் கேட்பதுல என்ன தப்பு என்றார்கள். (இந்த பிரச்சனையை அலசி ஆராயும் பொருட்டு பாப்பையாவை கூப்பிட்டு பட்டிமன்றமே வைக்கலாம் போலிருக்கே)
இதிலாவது ஒரு நியாயம் இருக்கிறது. அண்மையில் நடிகை இனியாவை தொடர்பு கொண்ட ஒரு நிருபருக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை. சென்னையில இருக்கீங்களா, இருந்தா ஒரு பேட்டி வேணும். -இது நிருபர். அப்படியா? பேட்டிக்கு எவ்ளோ பணம் தருவீங்க? - இது இனியா. இதை தொடர்ந்த காரசாரமான விவாதங்கள் ஒரு முடிவுக்கு வரும்போது போனை டொங் என்று வைத்த நிருபர் 'நாசமா போவ...' என்று இனியாவை சபித்ததுதான் கண்கொள்ளாக் காட்சி.
|