முகத்தில் ஓல்டு களை வந்துவிட்டது விக்ரமுக்கு. இருந்தாலும் அவருக்கான மார்க்கெட் அப்படியே இருப்பதுதான் ஆச்சர்யம். (ஓல்டு இஸ் கோல்ட் என்பதால் இருக்கலாம்) தற்போது ஷங்கரின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் இவரை மறுபடியும் அழைத்திருக்கிறாராம் பாலா.
'பரதேசி' படத்தை வரலாறு காணாத வகையில் சீக்கிரம் முடித்துவிட்டார் இவர். இருந்தாலும் துட்டை வட்டியோடு எண்ணி வைத்துவிட்டு படத்தை ரிலீஸ் பண்ணிக்கோங்க என்று கூறிவிட்டது இப்படத்திற்காக பைனான்ஸ் பண்ணிய பி.வி.பி நிறுவனம். விநியோகஸ்தர்களுக்கு படத்தை விற்றாலும் மொத்த பணமும் முதலிலேயே கைக்கு வராது. அப்படி வந்தால்தான் பி.வி.பிக்கு பணத்தை செட்டில்மென்ட் செய்ய முடியும். இதையெல்லாம் மனத்தில் வைத்துதான் அடுத்த படத்தை அறிவிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறாராம் பாலா.
விக்ரம்-பாலா மறுபடியும் இணைகிறார்கள் என்றால் துவக்க நாளிலேயே படத்திற்கு ஒரு பெரும் தொகை அட்வான்சாக கிடைக்கும். அதை வைத்து பி.வி.பி தொகையை சமாளிக்கலாம் என்பது பாலாவின் கணக்கு. இதில் விக்ரமுடன் வேறொரு ஹீரோவையும் கூட்டு சேர்க்கலாமே என்பதும் பாலாவின் கணக்காம்.
அழுக்குல தடவி அம்மணமா உருட்டுனாலும் பாலான்னா பரவசப்படுது ஹீரோக்கள் வட்டாரம். அதுதான்யா இன்னும் புரியல! |