விஜயகாந்த் என்ற யானையை முருகதாஸ் என்ற அங்குசம் அடக்கியது எப்போது தெரியுமா? 'ரமணா' திரைப்படத்தில்தான். இன்று எப்படியோ? அந்த திரைப்படத்தை உருவாக்கும்போது மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தில் இருந்தார் விஜயகாந்த். அவர் இறப்பது போல ஒரு காட்சியை க்ளைமாக்சில் வைக்கவே ஒரு துணிச்சல் வேண்டும். முதலில் இதற்கு ஒப்புக் கொள்ள மறுத்த விஜயகாந்த்தை ஒப்புக் கொள்ள வைத்து அப்படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கினார் முருகதாஸ்.
படம் வெளிவந்தது. சூப்பர் டூப்பர் ஹிட். இப்படத்தை ரீமேக் செய்ய எல்லா மொழிகளிலும செம போட்டி. தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க இதே படத்தை ரீமேக் செய்தார் முருகதாஸ். இதே ரமணா இப்போது இந்திக்கு போகிறது. இதில் அக்ஷய்குமார்தான் ஹீரோவாக நடிக்கப் போகிறார்.
இப்படத்தை இயக்கக் கூடிய தகுதி வாய்ந்த நபரை தேடிக் கொண்டிருந்தாராம் அக்ஷய். 'உங்களால் முடியுமா' என்று பிரபுதேவாவை அணுகி கேட்க, வெவ்வேறு கமிட்மென்ட்டுகளை காரணம் காட்டிய பிரபு, கைகாட்டிய இடம்தான் சாலப்பொருத்தம்.
'ஒரு ரீமேக் படத்தை அச்சடிப்பது போல எடுப்பதுதான் பெரிய ரிஸ்க். அதை சரியாக செய்யக் கூடிய ஒரே தமிழ் இயக்குனர் ஜெயம் ராஜாதான். எனவே அவரைக் கேளுங்கள்' என்றாராம் பிரபு. அதன்பிறகு நடந்த விறுவிறு பேச்சு வார்த்தைகளை தொடர்ந்து...
இந்திக்கு போகிறார் ஜெயம் ராஜா! |