ஜார்ஜியா வாங்க... ஜாலியா போங்க என்பதுதான் அந்நாட்டின் தாரக மந்திரமாக இருக்கிறது. ஆனால் ஒரு இயக்குனரை பொருத்தவரை அதுவே 'ஜாலியா வாங்க. லேசியா போங்க' என்றாகிவிட்டது இப்போது. சமீபத்தில் அந்நாட்டுக்கு போயிருந்தார் செல்வராகவன். அதுவும் தனது 'இரண்டாம் உலகம்' படக் குழுவினரோடு. போன இடத்தில் ஜாலியாக இருக்க விட்டார்களா என்றால் அதுதான் இல்லை.
கூடவே இவர் அனுஷ்காவையும் அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார். பொதுவாகவே செல்வா யோசிக்க ஆரம்பித்தால் 'நான் அசைந்தால் அசையும் உலகமெல்லாம்' கதைதான்! அந்த பழம் பாடலுக்கு நடுவே ஒரு ஃபிரீஸ் வருமல்லவா? அப்படியே காடு, மரம், அலைகள் எல்லாம் ஸ்தம்பித்து நிற்கும். அதைப்போலவே இங்கு செல்வா விஷயத்திலும் எல்லாம் ஸ்தம்பித்து நின்று நின்று இயங்கியதாம்.
இப்படி அவர் மூடுக்கு ஏற்றார் போல ஆடியதால் அனுஷ்காவின் கால்ஷீட்டில் ஏகப்பட்ட குழப்பம். கார்த்திக் நடிக்கும் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படப்பிடிப்பிலும் இதனால் பூகம்பம் வர, ஜார்ஜியாவின் டெலிபோன் எக்சேஞ்சே 'சே...' என்றாகிற அளவுக்கு ஆகிவிட்டது. அப்படியொரு போன் தொல்லை இங்கிருந்து. எப்படியோ கால்ஷீட்டை கலைத்துப் போட்டு இரண்டு படக்குழுவினருக்கும் புட்டிப்பால் ஊட்டிவிட்டாராம் அனுஷ்கா.
இப்போது இருதரப்புக்குமே டென்ஷன் ஃப்ரீ.
|