|
விண்ணை தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவுக்கு அண்ணனாக நடித்திருப்பாரே சத்யா? பார்ட்டி இப்போது சென்னையிலேயே செட்டில் ஆகிவிட்டார். ஏன்? தமிழ் சினிமாவை ஒரு கை பார்க்காமல் விடுவதில்லை என்பதற்காகதான். "மலையாளத்தில் ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும், இமிடியெட் அப்ரீசியேஷன் தமிழ்நாட்லதான் கிடைக்குது." சத்யாவின் சந்தோஷம் இது.. "படம் பார்த்திட்டு வெளியே வர்ற ஆடியன்ஸ் அடையாளம் தெரிஞ்சுகிட்டு கையை குலுக்குவதும், ஆட்டோகிராப் வாங்குறதும் கேரளாவுல அவ்ளோ சீக்கிரம் நடந்திடாது. இங்கே ரொம்ப எனர்ஜிட்டிக்கா இருக்கு." எதார்த்தமாக பேச ஆரம்பிக்கும் சத்யாவுக்கு விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு ஏராளமான வாய்ப்புகள் வருகிறதாம். ஒரு கதவு திறந்திருக்கு. படார்னு பாஞ்சிரக்கூடாது. நிதானமா என்ட்ரி கொடுப்போம் என்று பக்குவமாக பேசுகிறார்.
மொத்தம் 20 நாட்கள் அந்த படத்திற்காக நடிச்சேன். கவுதம் சாருக்குதான் நன்றி சொல்லணும். சிம்புவும் ரொம்ப கோ ஆபரேடிவ் ஆர்ட்டிஸ்ட். அவரை பார்க்கறதுக்கு முன்னாடி நிறைய சொன்னாங்க. ஆனால், நான் கேள்விப்பட்டதை விட வேற மாதிரி இருந்தாரு. அவருகிட்ட அவருடைய நடிப்பையே விமர்சிச்சு பேசுற அளவுக்கு என்னை அனுமதிச்சாருன்னா பாருங்களேன் என்று கண்கள் மின்ன பேசும் சத்யாவுக்கு, ரகுவரன் போல வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை.
விண்ணை தாண்டி வருவாயா பிரமோஷனுக்காக தியேட்டர் ரவுண்ட்ஸ் போகிறார்களாம் சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர். சத்யாவுக்கும் அழைப்பு. அவசரமாக கிளப்பிக் கொண்டிருந்தவர், இங்க வர்ற எல்லா படங்களையும் பார்த்து அப்சர்வ் பண்ணிட்டு இருக்கேன். நல்ல பட டைரக்டர்களை நேரடியாக சந்திச்சு வாய்ப்பு கேட்கலாம்னு இருக்கேன் என்றார்.
விண்ணை தாண்டி வருவாயா பாத்திருந்தா அதுக்கு முன்னாடியே அவங்ககிட்டேயிருந்து அழைப்பு வரும் பாஸ்...
|