|
உயிர், மிருகம், இரண்டே படங்கள்தான். பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகிவிட்டார் டைரக்டர் சாமி. 'கோக்குமாக்கான கதை சொல்லி' என்ற பெயரும் அவருக்கு கிட்டியிருந்தது. அதன்பின் அவரது இயக்கத்தில் உருவான சரித்திரம், ஒரு சில சிக்கல்களால் தடைபட்டிருக்கிறது. தற்போது நாடோடிகள் பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்காக சாமி இயக்குகிற படம் சிந்து சமவெளி.
பெண்ணை அடிமையாக பார்க்கிறார்கள். பெண்ணை சாமியாக பார்க்கிறார்கள். பெண்ணை பெண்ணாக பார்க்கும் படம் இது என்று குறு விளக்கம் கொடுக்கிறார் சாமி. என் முந்தைய படங்கள் எப்படி சர்ச்சைக்குரிய படமாக இருந்ததோ, இந்த படமும் அப்படியிருக்கும். ஆனால் ஒரு சின்ன வித்தியாசம், இந்த படத்தை எல்லாரும் குடும்பத்தோடு பார்க்கலாம் என்றார். ஆணும் பெண்ணும் சமம் என்பதை சொல்லுகிற படமாக இருக்குமாம் இது.
இதற்கு முன் நான் விரும்பாமலே என்னுடைய படங்களை விட நான் அதிகம் பேசப்பட்டிருக்கிறேன். இந்த சிந்து சமவெளியில் சாமி என்கிற படைப்பாளியை விட அவன் படைப்பு அதிகம் பேசப்பட வேண்டும் என்ற உறுதியோடுதான் இந்த படத்தை தொடங்குகிறேன் என்ற சாமி, பதினேழு வருடங்களாக சினிமாவில் ஒரு இடத்தை பிடிப்பதற்காக போராடும் இளைஞர் ஒருவருக்கு கஜினி என்று பெயரை மாற்றி இப்படத்தில் முக்கிய ரோல் கொடுத்திருக்கிறார்.
ஹரிஷ், அமலாபால் ஜோடியாக நடிக்கிறார்கள். அமலாவுக்கு இது நாலாவது படம். மைனா, வீரசேகரன் உள்ளிட்ட நான்கு படங்களில் நாயகியாக நடித்திருக்.கும் அமலா, சாமி சாரை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கேன்.. பத்மப்ரியா மேட்டர்ல அவரு கேரளா வரைக்கும் பேமஸ். கொஞ்சம் பயந்துதான் இந்த படத்திலே நடிக்க ஒப்புக்கிட்டேன். ஆனால் அவருகிட்ட நல்ல பேரு எடுப்பேன் என்றார் நம்பிக்கையோடு.
இப்படத்தை நாடோடிகள் ரிலீஸ் ஆன அதே ஜுலை 26 ந் தேதி ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.
சென்ட்டிமென்ட்? |