|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தமிழக சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் வராது: புதிய தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி அறிவிப்பு - விலைவாசி உயர்வு பிரச்சினை: பாராளுமன்றம் 4-வது நாளாக முடங்கியது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி - ஐகோர்ட்டு நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது 65 ஆக உயர்வு: மத்திய மந்திரி சபை ஒப்புதல் - கோஹினூர் வைரத்தை திருப்பித் தர இயலாது: பிரிட்டிஷ் பிரதமர் - இலங்கையில் சியதா டி.வி. அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் - கருணாஸ் வழக்கு: சீமானின் உதவியாளருக்கு முன்ஜாமீன்
சென்னையில் ஐஸ்வர்யாராய்
ரெட்டசுழி ஆடியோவை வெளியிடுகிறார்

'ஃபிப்டி கேஜி தாஜ்மஹால்' என்று ஐஸ்வர்யாராயை வர்ணித்த கவிப்பேரரசு வைரமுத்து, அதே தாஜ்மஹாலை வருகிற 15 ந் தேதி சந்திக்கப் போகிறார். எங்கே? ஏன்?

தாமிரா இயக்கிய ரெட்டசுழி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 15 ந் தேதி சென்னை சத்யம் வளாகத்தில் நடக்கிறது. முதல் சி.டி யை ஐஸ்வர்யாராய் வெளியிட பெற்றுக் கொள்பவர் நம்ம வைரமுத்துவேதான்! தன்னை நினைத்து இப்படி ஒரு ஐஸ்கிரீம் வரிகளை எழுதியவரை ஐஸ் இதற்கு முன் சந்தித்திருப்பாரா? குறைந்தபட்சம் விசாரிக்கவாவது செய்திருப்பாரா என்பது அந்த மேடையில் விளங்கிவிடும்.

பாலசந்தர், பாரதிராஜா மட்டுமல்ல. படத்தில் ஒரு டஜன் குழந்தைகளும், அஞ்சலியும் கூட நடித்திருக்கிறார்கள். இந்த கதையில் அழகான ஒரு காதலும் இருக்கிறது. முழு படமும் முடிந்துவிட்ட நிலையில் ரெட்டசுழியை ஏப்ரலில் வெளியிட முடிவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர் ஷங்கர். எந்திரன் படப்பிடிப்புக்கு ஐஸ் கால்ஷீட் கொடுக்கவில்லை. அதனால் நகத்தை கடித்துக் கொண்டிருக்கிறார் ஷங்கர் என்றெல்லாம் செய்திகள். ஆனால் ரெட்ட சுழி ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அழைத்ததும் வர ஒப்புக் கொண்டாராம் ஐஸ்.

ரெட்டசுழியின் ஆடியோவை ஐஸ்சே வெளியிடுகிறார் என்றால், அதிர்ஷ்ட சுழி அப்படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் தாமிராவுக்குதானே?

.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter