|
தைரியம் பட ஹீரோ குமரன்தான் இப்போதைக்கு புது இயக்குனர்களின் ஒரே டார்கெட்! ஏன்? முதல் படத்திலேயே பத்து கோடி செலவு செய்தவர். விளம்பர செலவு மட்டும் மூன்று கோடிக்கு மேல். யாரும் வாங்க வரவில்லையென்றால் சொந்த ரிலீஸ். இப்படி ஆடம்பர தேர் போல கோடம்பாக்கத்தை பவனி வந்தால் சும்மாவா இருப்பார்கள்? என்கிட்ட கதை இருக்கு என்று நாள்தோறும் பத்து பேர் கதவை தட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆனால் முதல் பட அனுபவம் அவரை வேறு மாதிரியாக சிந்திக்க வைத்திருக்கிறது. "என்னை வைத்து படம் எடுக்க வர்றவங்க மூன்றரை கோடி ரூபாயை எங்கிட்ட கொடுங்க. நானே ஒரு நல்ல டைரக்ரை வச்சு எடுத்து கொடுக்கிறேன். படம் பிடிக்கலையா? அந்த மூன்றரை கோடிக்கு வட்டி போட்டு அமௌன்ட்டை செட்டில் பண்ணிடுறேன். வசதி எப்பிடி" என்கிறாராம்.
இந்த கண்டிஷனுக்கு ஜர்க் அடிக்கிறவர்களிடம், "இந்த டீல் வேணாம்னா விடுங்க. என் சம்பளமா ஒன்றரை கோடி கொடுங்க. கால்ஷீட் தர்றேன்" என்று இன்னொரு குண்டையும் தூக்கி போடுகிறாராம். கூலிக்கு ஓணான் பிடிக்க போகலாம்னு பார்த்தா வேலியே மேல விழுந்த கதையாயிருச்சே என்று தலை தெறிக்க ஓடுகிறார்கள் தயாரிப்பாளர்களும் புது இயக்குனர்களும்! |