|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
பாமக தலைமையில் 3வது அணிக்கு தயார்: டாக்டர் ராமதாஸ் - நிரூபம ராவ், மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு - காமன்வெல்த் போட்டி நாட்களில் டெல்லியை தகர்க்க தீவிரவாதிகள் சதி; அமெரிக்கா புதிய எச்சரிக்கை - ஸ்ரீதேவி படத்தில் நடிக்க அசின் மறுப்பு -
அம்மா என்றால் முதுகு
ஹன்சிகாவின் புதுப் புரட்சி
Hansika Mothwani

எங்கே காட்டூ(ஸ்) என்று கேட்காதவரை டாட்டூஸ் வரைந்து கொள்ளும் நடிகைகளுக்கு பிரச்சனை இல்லை. த்ரிஷா, நயன்தாரா, குஷ்பு என்று பல நடிகைகளுக்கு டாட்டூஸ் மீது தணியாத காதல். பச்சையா சொல்லணும்னா பச்சை குத்தறதைதான் இப்படி டாட்டூஸ்னு ஸ்டைலா சொல்லுது இங்கிலீஷ்.

இந்த லிஸ்ட்டில் லேட்டஸ்டாக சேர்ந்திருக்கிறார் ஹன்சிகா மோத்வானி. நயன்தாரா தனது காதலர் பிரபுதேவாவின் இனிஷியலை வலது கையில் வரைந்து கொண்டதை எட்டுகால செய்தியாக வெளியிட்டு புரட்சி ஏற்படுத்தின பல தமிழ் பத்திரிகைகள். படப்பிடிப்பில் அந்த டாட்டூசை மறைக்க அவர் பட்டபாடு அவருக்கே வெளிச்சம்.

ஆனால் ஹன்சிகாவுக்கு அந்த பிரச்சனை இல்லை. ஏனென்றால் இவர் முதுகில்தான் குத்திக் கொள்ளப் போகிறாராம். (பல படங்களில் அந்த காலி கிரவுண்டுதானே கவர்ச்சி கிரவுண்ட்?) அதிலும் சேஃப்டி இவர். யார் பெயரையோ பச்சை குத்திக் கொண்டு பிரச்சனையை கிளறாமல் இவரை ஈன்றெடுத்த அம்மா பெயரைதான் குத்திக் கொள்ளப் போகிறாராம். ஐதராபாத்தில் இதற்கென்றே ஒரு ஸ்பெஷலிஸ்ட் இருக்கிறாராம். அவரிடம் அப்பாயின்ட்மென்ட் கேட்டிருக்கிறாராம். அடுத்த வாரம் இந்நேரம் ஹன்சிகாவின் முதுகில்... ம் அதேதான்!

.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter