|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
நித்யானந்தா போன்ற போலி சாமியார்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொடரும்: கி.வீரமணி - ஈரோடு கம்யூ செயலாளர் கொலை: பள்ளிபாளையத்தில் 150 விசைதறி பட்டறைகள் மூடப்பட்டது - உலக கோடீஸ்வரர் பட்டியல்; டாப் 10 ல் முகேஷ் - லட்சுமி மிட்டல் இடம் பிடித்தனர் - ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவிற்கு 2 தங்கம் - டெல்லி விமான நிலையத்தில் முழுஉடலையும் காட்டும் ஸ்கேனிங் அமைக்கப்படவுள்ளது
கையெடுத்து வணங்கி மன்னிப்பு....
விமான நிலையத்தில் ஜெயராம் உருக்கம்

கருத்த தடித்த எருமை போன்ற தமிழச்சி என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாக நடிகர் ஜெயராம் மீது குற்றச்சாட்டு. தமிழகத்தில் பல்வேறு அமைப்புகளும், தலைவர்களும் அவருக்கு எதிராக தங்கள் கண்டனத்தை ஆவேசமாக பதிவு செய்தார்கள். விஷயம் விபரீதம் ஆனதை உணர்ந்த ஜெயராம், அவசரம் அவசரமாக நடிகர் சங்கத்திற்கு தனது மன்னிப்பு கடிதத்தை அனுப்பி வைத்தார். அது பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அதற்குள் வளசரவாக்கத்தில் இருக்கும் அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரது வீட்டை துவம்சம் செய்துவிட்டார்கள். விலை உயர்ந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். போலீஸ் முன்னிலையிலேயே நடந்த இந்த செயல் அவசரம் அவசரமாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. உயரதிகாரிகள் விரைவாக வந்து சேர்வதற்குள் சிலர் தப்பியோடினார்கள். ஆனாலும் இந்த சம்பவம் தொடர்பாக சீமானின் நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டார்கள்.

கலவரம் நடந்த போது ஜெயராம் கேரளாவில் இருந்தார். வீட்டிலிருந்த அவரது மனைவி, மகள், தாய் உள்ளிட்ட பலரும் அதிர்ச்சியில் வீட்டு அறையை உட்புறமாக தாளிட்டு தப்பினர். இதையடுத்து அவசரம் அவசரமாக சென்னை திரும்பிய ஜெயராம் விமான நிலைத்திலேயே கையெடுத்து கும்பிட்டபடி தனது மன்னிப்பை கோரினார்.

நான் கடந்த 23 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கிறேன். இதுவரை மனம் அறிந்து நான் எவரையும் புண்படுத்தும் வகையில் எந்த வார்த்தையும் சொன்னதில்லை. நடந்து கொண்டதும் இல்லை.

அப்படி இருக்க என்னை அமோகமாக வரவேற்று, ஆதரித்த தமிழ் உள்ளங்களை நான் எந்த வகையிலாவது புண்படுத்துவேனா?.

அப்படி செய்தால் அது தாயை பழிப்பதுபோல் ஆகும் அல்லவா?.

தொலைக்காட்சி பேட்டியில் நான் சொன்னது நான் செய்த ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து எதார்த்தமாக சொன்ன ஒரு ஜோக். கண்டிப்பாக அது யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு சொன்னது அல்ல. இது மனசாட்சி மீது ஆணை.

இருந்தும் இது ஏதோ ஒருவகையில் தமிழ் உள்ளங்களை முக்கியமாக தமிழ் தாய்மார்களை புண்படுத்தி இருந்தால் என் கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி மன்னிப்பு கூறுகிறேன். தயவு செய்து இதை ஏற்றுக்கொண்டு உங்கள் மனதில் மீண்டும் எனக்கு இடம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று நிருபர்கள் முன் தழுதழுத்தார் ஜெயராம்.

.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter