|
ஏழு கோடி ரூபாய், அம்போன்னு போச்சே என்று அழுது புலம்பி பத்திரிகைகளில் பேட்டியளித்து வருகிறார் கமெடி புயல்.
ஒண்ணு மண்ணா பழகிட்டு கண்ணுல ஊசியை செருகிட்டாங்களே. போயிட்டு போறாங்க. அவங்க மேல புகார் கொடுத்து அவங்க வாழ்க்கையை ஏன் கெடுக்கணும் என்றெல்லாம் மன்னிக்கிற மாதிரியும் பேசி வருகிறார். ஆனால் நிஜத்தில் இவரை ஏமாற்ற முடியுமா? இவர் அரசல் புரசலாக குற்றம் சாட்டும் காமெடியர்கள் என்ன சொல்கிறார்கள்? விசாரித்தால் அவரு வைகை புயல் இல்லைங்க. ‘பொய்’கை புயல் என்கிறார்கள். பெயர் சொல்ல விரும்பாத அவரது முன்னாள் சகா ஒருவர் இப்படி சொல்கிறார்...
"அவரை போயி யாராவது ஏமாத்த முடியுங்களா? ஒரு டாகுமென்ட்டை நம்மகிட்ட படிச்சு காட்ட சொல்லுவாரு. அதுக்கு வரி வரியா அர்த்தம் கேட்பாரு. அப்படியே நம்மளை அனுப்பிட்டு நம்மளை விட படிச்சவங்களை வரச்சொல்லி அதே டாகுமென்ட்டை படிச்சு காட்ட சொல்லுவாரு. அவரையும் நம்பாம அதுக்கு பிறகு ஐம்பது பேரையாவது இப்படி படிக்க சொல்லி அத்தனை பேர் சொல்ற அர்த்தமும் ஒண்ணா இருந்தாதான் கையெழுத்தே போடுவாரு. அப்படிப்பட்டவர் எல்லாரையும் நம்பி ஏமாந்திட்டேன்னு சொல்றதுதான் ரொம்ப ஆச்சர்யமா இருக்குங்க என்றார்.
என்னவோ நடந்தது, மர்மமா இருக்குது... |