|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
பாமக தலைமையில் 3வது அணிக்கு தயார்: டாக்டர் ராமதாஸ் - நிரூபம ராவ், மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு - காமன்வெல்த் போட்டி நாட்களில் டெல்லியை தகர்க்க தீவிரவாதிகள் சதி; அமெரிக்கா புதிய எச்சரிக்கை - ஸ்ரீதேவி படத்தில் நடிக்க அசின் மறுப்பு -

தத்துபித்துவம், முடியலத்துவம், லவ்வோத்துவம்....?

தத்துபித்துவம், முடியலத்துவம், லவ்வோத்துவம் என்று இளசுகளின் ஏரியாவில், எங்கு திரும்பினாலும் ரவுசு. ஆனால் அவர்களை தனது கவிதையால் கட்டிப்போட்டிருக்கிற ஒருவர் கவிஞர் தபூசங்கர். பேனாவை லேசாக உதறினால் கூட ஒரு சொட்டு காதல் விழுகிற மாதிரிதான் கவிதை எழுதுவார் இந்த இளைஞர். “எதை கேட்டாலும் வெட்கத்தை தருகிறாய். வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?” இது தபூ எழுதிய கவிதை ஒன்றில் வரும் ஃபேமஸ் வரிகள்.

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் என்று ஒரு படத்தையே இயக்கிக் கொண்டிருக்கிறார் இப்போது. குங்குமப்பூவும் கொஞ்சு புறாவும் பட நாயகன் ராமகிருஷ்ணன் ஹீரோவாக நடிக்க, வெண்ணிலா என்ற புது முகத்தை அறிமுகப்படுத்துகிறார் தபூ.

நம்ம படத்திலே சென்ட்டிமென்ட்டை சொல்லி அழ வைக்கிறது. சீரியஸ்சா முண்டா தட்டி மார்க்கெட்டை ரணகளமாக்குற விஷயமெல்லாம் கிடையாது. திகட்ட திகட்ட லவ்வை சொல்லப் போறேன். அதுவும் ரொம்ப ஜாலியா, எல்லாரும் ரசிக்கிற மாதிரி. நம்ம படத்தில நடிக்கும் காதலர்களுக்கு வில்லனே கிடையாது. எப்படி என்பதுதான் கதை என்றார் தபூசங்கர். சுந்தர் சியிடம் உதவியாளாராக இருந்தவர் அல்லவா? படத்திலே காமெடிக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாராம். நல்லா சிரிக்கலாம். மனசை லேசாக்கிட்டு போகலாம்னு, இப்பவே நம்மை டிக்கெட் எடுக்க தூண்டுகிறார் தபூ.

கதையா... அது வந்து?ன்னு இழுக்கிற இயக்குனர்களுக்கு மத்தியில், “கேட்டுக்கோ சொல்றேன்”னு முழு கதையையும் சொல்ல துணிகிறார் தபூ.

காதல்னு வந்திட்டா துணிச்சல் தன்னால வருதுப்பா!

-ஆர்.எஸ்.அந்தணன்

.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter