Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட அலெக்ஸ் பால்மேனன் ஜெயலலிதாவுடன் சந்திப்பு - நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஆ.ராசா பங்கேற்றார் - கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீடுகளில் சிபிஐ ரெய்டு - புதுக்கோட்டை தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன்

கமல் பரிந்துரைக்கும் படம்! திரையுலகம் வியப்பு

நந்தலாலா படத்தை பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே போகிறது. இந்த எதிர்பார்ப்புக்கு இன்னும் கொஞ்சம் உரம் போட்ட மாதிரி இருக்கிறது கமல்ஹாசனின் ரெகமெண்டேஷன். ஒருநாள் மிஷ்கினை தனது ஆபிசுக்கு வரச்சொன்ன கமல், சுமார் நாலு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தாராம். அதன்பின் இவரது நந்தலாலா படத்தை பார்த்தாராம். அவ்வளவுதான்... தமிழ்சினிமா விவிஐபிகள் 100 பேருக்காவது போன் செய்து பேசியிருப்பாராம். எல்லாரிடமும் இந்த படம் ரொம்ப பிரமாதமா இருக்கு. இது வெளிவந்தால் தமிழ்சினிமாவுக்கு பெருமை என்ற ரீதியில் பேச, இன்ப அதிர்ச்சியில் திக்கு முக்காடி போயிருக்கிறார் மிஷ்கின்.

சன் டிவியின் செயல் தலைவர் சக்ஸேனாவுக்கு போன் செய்த கமல், “இந்த படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கணும். அவ்வளவு நல்ல படம்” என்று கூறியிருப்பது இன்னும் அதிக எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

அவ்வளவு பெரிய கலைஞன் என்னை பாராட்டுவது ரொம்பவே நெகிழ்ச்சியாக இருக்கு. சித்திரம் பேசுதடி வெற்றிக்கு பிறகு நந்தலாலாவை எடுக்கணும்னு நினைச்சேன். ஆனால் முடியலே. ஒரு கட்டத்தில் திரும்பவம் லேண்ட் மார்க்குக்கு வேலைக்கு போயிடலாமா என்று கூட நினைச்சேன். அப்படி போயிருந்தா இவ்வளவு பெரிய கலைஞனின் பாராட்டு கிடைச்சிருக்குமா? என்று நெக்குருகினார் மிஷ்கின்.

நந்தலாலா வரும்போது வரட்டும் என்று புதிய பட வேலைகளில் இறங்கிவிட்டாராம். அநேகமாக இந்த கதையில் சேரன் நடிப்பார் போலிருக்கிறது. ஆக்ஷன் வேடம் என்பதால் இப்பவே தாடி வளர்க்க ஆரம்பித்திருக்கிறாராம் சேரன்.

-ப்ரியா மினி

Cine Diary
Cine Diary
Cine Diary
Actress Gallery
Fans Banners
பாலை
பாலை
Srilekha Actress Tamanna Latest Hot Pics Actress Ramya Latest Photos Actress Anushka
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter