|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
பாமக தலைமையில் 3வது அணிக்கு தயார்: டாக்டர் ராமதாஸ் - நிரூபம ராவ், மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு - காமன்வெல்த் போட்டி நாட்களில் டெல்லியை தகர்க்க தீவிரவாதிகள் சதி; அமெரிக்கா புதிய எச்சரிக்கை - ஸ்ரீதேவி படத்தில் நடிக்க அசின் மறுப்பு -
மர்மயோகி போட்டோசெஷன்...
கமல், த்ரிஷா. ஸ்ரேயா பங்கேற்பு

கோலாகல துவக்க விழாவுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது மர்யோகி. KamalHasanஅழைப்பிதழ்களை வித்தியாசமாக உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம் கமல். இதற்காகவே பிரமாண்ட புகைப்பட செஷன் நடந்து வருகிறது.

நுங்கம்பாக்கத்தில் அமைந்திருக்கும் போட்டோ ஸ்டுடியோ ஒன்றில் ஏராளமான கெடுபிடிகளுடன் துவங்கியிருக்கும் இந்த போட்டோ செஷனில் த்ரிஷா, ஸ்ரேயா இருவரும் கமலுடன் 'கட்டிப்பிடி' போட்டி நடத்தியிருக்கிறார்கள். சுமார் நான்கு நாட்கள் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த செஷனில், ஆடை வடிவமைப்பை பார்த்தவர்கள் ஆ வென்று வாய் பிளக்கிறார்கள். மன்னர் கால ஆடைகளை தத்ரூபமாக வடிவமைத்திருக்கிறார்களாம். த்ரிஷா, ஸ்ரேயாவுக்கு வடிவமைக்கப்பட்டிருக்கும் கச்சைகள், பார்த்தவுடனேயே இச்சையை தூண்டுகிறதாம்.

ஏராளமான பொருட் செலவில் நிஜமாகவே தோலில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் Trishaவரவழைக்கப்பட்டுள்ளது. குளுகுளு ஏ.சி யில் படம் எடுக்கும்போதே வேர்த்து கொட்டுகிறது. பிரமாண்ட வெளிச்சத்தின் முன், அல்லது கொளுத்தும் வெயிலின் கீழ் எப்படிதான் இந்த ஆடைகளை உடுத்திக் கொண்டு நடிக்கப் போகிறோமோ என்று இப்போதே கண்ணை கட்டுகிறதாம் மேற்படி நடிகைகள் இருவருக்கும்!

மர்மயோகி, மன்னர் கால கதை என்பதால், வாள் சண்டை, குதிரை பயிற்சி ஆகியவற்றையும் முறைப்படி கற்று வருகிறாராம் த்ரிஷா.

-ஆர்.எஸ்.

.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter