Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட அலெக்ஸ் பால்மேனன் ஜெயலலிதாவுடன் சந்திப்பு - நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஆ.ராசா பங்கேற்றார் - கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீடுகளில் சிபிஐ ரெய்டு - புதுக்கோட்டை தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன்
குசேலன் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி
பிரமிட் சாய்மீரா விளக்கம்

குசேலன் படம் தொடர்பான சர்ச்சைகளுக்கு இதோடு முடிவு கட்டுங்கள் என்று Swaminathanகேட்டுக் கொண்டார் பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுவாமிநாதன். நிருபர்களிடம் குசேலன் பிரச்சனை குறித்து தெளிவாக விளக்கம் அளித்த அவர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு திருப்பி வழங்கப்பட்ட தொகை பற்றியும் கூறினார்.

இந்த படத்தால் இந்நிறுவனத்திற்கு முப்பது கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாம். தயாரிப்பாளர்கள் திருப்பி கொடுத்த ஐந்து கோடியுடன், தனது பங்காக ஒன்றரை கோடியையும் போட்டு ஆறரை கோடி ரூபாயை திருப்பி கொடுத்திருக்கிறது இந்நிறுவனம். வருடத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் எங்களுக்கு இது பெரிய இழப்பில்லை. ஆனால், பிரமிட் சாய்மீரா பற்றி வெளியில் கசியும் தகவல்கள் மிகவும் தவறாக இருக்கிறது என்று வருந்திய சுவாமிநாதன், குசேலன் தவிர்த்து பிற கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

உலகம் முழுவதும் பொருளாதார நிலை வீழ்ச்சியடைந்துள்ளது. பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட சரிவின் காரணமாகவும் சில முடிவுகளை நாங்கள் எடுக்க வேண்டியிருந்தது. மர்மயோகி படத்திற்கு இதுவரை பதினேழரை கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறோம். பொருளாதார நிலை சீரடையும்போது இந்த படத்தை மீண்டும் துவங்குவோம். இந்தி படங்களை விநியோகம் செய்து வந்ததையும் நிறுத்தியுள்ளோம். இனிமேல் படங்களை வாங்குகிற விஷயங்களில் புதிய முறைகளை கடைபிடிப்போம் என்றார் சுவாமிநாதன்.

-ஆர்.எஸ்.அந்தணன்

Cine Diary
Cine Diary
Cine Diary
Actress Gallery
Fans Banners
பாலை
பாலை
Srilekha Actress Tamanna Latest Hot Pics Actress Ramya Latest Photos Actress Anushka
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter