Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட அலெக்ஸ் பால்மேனன் ஜெயலலிதாவுடன் சந்திப்பு - நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஆ.ராசா பங்கேற்றார் - கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீடுகளில் சிபிஐ ரெய்டு - புதுக்கோட்டை தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன்
எத்தியோப்பியாவில் மர்மயோகி
- கமல்ஹாசனின் உலகப் பயணம்!

ஜுலை 13-ந் தேதி மும்பையில் நடைபெறவிருந்த 'மர்மயோகி' படத்தின் Kamalhasanதுவக்கவிழா தவிர்க்க முடிந்த(?) காரணத்தால், 25-ந் தேதிக்கு தள்ளிப் போயிருக்கிறது. மிக பிரமாண்டமாக இந்த துவக்கவிழாவை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார் கமல். இதற்காக மட்டும் சுமார் 50 லட்சத்தை ஒதுக்கியிருக்கிறாராம் அவர். உலகம் முழுவதும் தாங்களே ரிலீஸ் செய்யவிருப்பதால், தேவையில்லாத ஆர்ப்பாட்டம் எதற்கு என்று முடிவு செய்த பிரமிட் சாய்மீரா, 'துவக்க விழாவே வேண்டாம். நேரடியாக படப்பிடிப்புக்கு போய் விடலாம்' என்று கருத்து தெரிவித்ததாம். ஆனாலும், விழா நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கமல் தனது செலவில் இந்த விழாவை நடத்துவதாக கூறிவிட்டாராம். (முன்பணமாக வாங்கிய நான்கரை கோடியில் ஐம்பது லட்சத்தை செலவிடுவதில் என்ன தயக்கம் இருக்க முடியும்?)

பிரமிட் சாய்மீராவோடு ராஜ்கமல் நிறுவனமும் இந்த தயாரிப்பில் இணைந்திருக்கிறது. இந்தியாவை தவிர, உலகம் முழுவதும் உள்ள முக்கியமான நாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறாராம் கமல். எத்தியோப்பியா போன்ற நாடுகளும் இந்த லிஸ்டில் அடக்கம்! சுமார் 80 கோடி ரூபாயில் மர்மயோகியை உருவாக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

தசாவதாரத்தின் ரிப்போர்ட் சுமாராக இருந்தாலும், ரெவின்யூ பிரமாதமாக இருப்பதால் புதிய தெம்போடு காணப்படுகிறார் கமல். குறிப்பாக சில ஏரியாக்களில் ரஜினியின் சிவாஜி கலெக்ஷனையே முறியடித்திருக்கிறதாம் தசாவதாரம்! இந்த யோகம் மர்மயோகியிலும் தொடரட்டும்!

-ஆர்.எஸ்.

Cine Diary
Cine Diary
Cine Diary
Actress Gallery
Fans Banners
பாலை
பாலை
Srilekha Actress Tamanna Latest Hot Pics Actress Ramya Latest Photos Actress Anushka
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter