Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட அலெக்ஸ் பால்மேனன் ஜெயலலிதாவுடன் சந்திப்பு - நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஆ.ராசா பங்கேற்றார் - கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீடுகளில் சிபிஐ ரெய்டு - புதுக்கோட்டை தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன்
கமலின் மர்மயோகி
இன்னொரு ஜோடியாகிறார் பத்மப்ரியா

சதிலீலாவதி படத்தில் தனக்கு ஜோடியாக கோவை சரளாவை சேர்த்தபோது, PadmaPriyaஒட்டுமொத்த கோடம்பாக்கமுமே கமலை சந்தேகத்தோடு பார்த்தது. இவருக்கு ஏதாவது ஆயிடுச்சா என்று வெளிப்படையாகவே விவாதித்தார்கள். ஆனால் படம் வந்தபின் அவரது ஹாஸ்யம் புரிந்து ரசித்தார்கள்.

மறுபடியும் கமல் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார். இவர் இயக்கி நடிக்கவிருக்கும் மர்மயோகி படத்தில் கமலுக்கு இன்னொரு ஜோடியாக நடிக்கிறார் பத்மப்ரியா. கொஞ்சம் ஆண் பிள்ளை மாதிரியே இருக்கிற இவரை தமிழில் அறிமுகப்படுத்தியவர் சேரன். அதன்பின் தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த பத்மப்ரியா, சாமியின் மிருகத்தில் நடித்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார். அப்படத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை அடுத்து தமிழ் படங்களே வேண்டாம் என்று ஒதுங்கியிருந்த நேரத்தில் தன்னுடன் நடிக்க திரும்பவும் அழைத்து வந்தார் சேரன். இந்த நிலையில்தான் மர்மயோகி வாய்ப்பு!

சேரன் படத்தை தவிர வேறு படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ள வேண்டாம் என்று கூறியிருக்கிறாராம் கமல். பத்து மாதங்கள் கால்ஷீட் வாங்கப்பட்டிருக்கிறது பத்மப்ரியாவிடம். எப்போதெல்லாம் படப்பிடிப்பு இருக்கிறதோ, அப்போது வந்தால் போதும். சும்மாயிருக்கிற நேரங்களில் வேறு படங்களில் நடிக்க போகவே கூடாது என்பது ஒப்பந்தம். இதற்கெல்லாம் சம்மதித்திருக்கிறாராம் பத்மப்ரியா. முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு சுவிட்சர்லாந்தில் நடைபெற இருக்கிறதாம்.

-ஆர்.எஸ்.அந்தணன்

Cine Diary
Cine Diary
Cine Diary
Actress Gallery
Fans Banners
பாலை
பாலை
Srilekha Actress Tamanna Latest Hot Pics Actress Ramya Latest Photos Actress Anushka
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter