கத்தரிக்காய் முற்றி கடைவீதிக்கே வந்துவிட்டது. லிங்குசாமி படத்தில் நயன்தாரா நடிப்பதில் சிக்கல் என்று கடந்த சில வாரங்களாகவே பேசப்பட்டு வந்தது. தற்போது இந்த படத்திலிருந்தே விலகிவிட்டதாக அறிவித்திருக்கிறார் நயன்.
பருத்திவீரன் கார்த்தி நடிக்கும் ‘பையா’ படத்தை லிங்குசாமி தயாரித்து இயக்குகிறார். இந்த படத்தில் நடிக்க கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பே நயன்தாராவுக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தார் லிங்குசாமி. யார் நேரமோ? அதன்பிறகு நயனின் படங்கள் தொடர் தோல்வியை சந்திக்க, ஒரு கோடி ரூபாய் கொடுப்பதா? என்று கவலைப்பட ஆரம்பித்தார் லிங்கு. இங்குதான் துவங்கியது பிரச்சனை. சம்பளத்தை குறைக்க மாட்டேன் என்று நயனும், வேறு ஹீரோயின் பார்க்கிறேன் என்று லிங்குவும் அடம் பிடிக்க ஆரம்பித்தார்கள்.
இந்த நிலையில் காஸ்ட்யூம் செலக்ஷனுக்காக நயன்தாராவை சென்னைக்கு வரவழைத்த லிங்குசாமி, கடைசிநேரத்தில் இந்த புரோகிராமை கேன்சல் செய்துவிட்டாராம். இவரது தம்பியும் படத்தின் தயாரிப்பாளருமான போஸ், சம்பளத்தை குறைத்துக் கொண்டால்தான் ஷ§ட்டிங். இல்லையென்றால் படமே கேன்சல் என்று நயன்தாராவிடம் பேசியதாக தெரிகிறது.
படப்பிடிப்புக்கு போகிற நேரத்தில் இப்படி நிர்பந்திப்பது பிடிக்காத நயன், படத்திலிருந்தே விலகிக் கொள்கிறேன் என்று கூறிவிட்டார் லிங்குசாமியிடம். இந்த படத்திற்காக வேறு சில பட வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். சுமார் நான்கு மாதங்களுக்கு மேல் வீட்டில் சும்மாயிருந்திருக்கிறேன். எனக்கு ஏற்பட்ட லட்சக்கணக்கான நஷ்டத்தை லிங்குசாமி தருவாரா? என்கிறார் நயன்.
கச்சா எண்ணெய் விலை குறைவதால் பெட்ரோல் விலையே குறையப்போவுது. நயன்தாரா தன்னோட சம்பளத்தை குறைச்சுகிட்டா என்னவாம் என்கிறார் திருவாளர் பொதுஜனம்!
-ஆர்.எஸ். |