First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இந்தியா முழுவதும் லாரி ஸ்டிரைக் - விடுதலைப்புலி பிரபாகரனை பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி காங்கிரஸ் கோரிக்கை - ஆனையிறவை சிங்கள ராணுவம் கைப்பற்றியது: , முல்லைத்தீவில் ராணுவம் விமானத்தாக்குதல் - தலை, கழுத்து புற்றுநோயிற்கு சிங்கப்பூரில் மருந்து கண்டுபிடிப்பு - விடுதலைப்புலிகள் வெற்றிபெறுவர் என வைகோ முழக்கம்
விஜய் ஆன்டனியின் புதிய நிறுவனம்
-துவக்கி வைப்பாரா விஜய்?

விஜய் ஆன்டனியின் அடுத்த இலக்கு ஆடியோ மார்க்கெட்! டைலாமோ, நாக்க முக்க Vijayantonyஎன்று இளசுகளின் நாக்கில் என்னென்னவோ மொழிகளை ஆடவிட்ட இந்த இசை ராஜா, ஆடியோ மார்க்கெட்டிலும் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறாராம்.

படத் தயாரிப்பில் இறங்கியிருக்கும் பல்வேறு நிறுவனங்கள், தாங்களே ஆடியோ கம்பெனியை துவக்கிவிடுகிறார்கள். காரணம், கடைகளில் விற்பதற்காக அனுப்பப்படும் ஆடியோ சிடிகள், பெரும்பாலும் இருந்த இடத்தை விட்டு நகருவதே இல்லையாம். எப்எம், ரேடியோ, டிவி என்று வரிசை கட்டி புதுப்பாடல்களை ஒலிபரப்பி விடுகிறார்கள். பிறகெப்படி கடைகளில் சிடி விற்கும்? இந்த உரிமையை வேறொரு நிறுவனத்திற்கு விற்றுவிட்டு வெறும் பேப்பர் கணக்கை மட்டும் வாங்கிக் கொள்வதில் உடன்பாடில்லாத நிறுவனங்கள் தாங்களே புதிய ஆடியோ கம்பெனியை துவங்கிவிடுகிறார்கள்.

இந்த உண்மையெல்லாம் தெரியாதவரல்ல விஜய் ஆட்டனி. ஆனால் புதிய திட்டம் ஏதாவது வைத்திருப்பார் போலிருக்கிறது. அதனால்தான் சொந்தமாக ஆடியோ கம்பெனி துவங்கியிருக்கிறார். இன்னும் சில தினங்களில் நடைபெறவிருக்கும் த.நா.4777 என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தனது புதிய ஆடியோ நிறுவனம் பற்றிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார் ஆன்டனி. விஜயை அழைத்திருக்கிறாராம். வந்தாலும் வருவார் என்கிறார்கள்.

-ஆர்.எஸ்.

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter