காதலில் விழுந்தேன் நகுலும், ரஜினி மகள் சௌந்தர்யாவும் பள்ளிக்கூட சினேகிதர்கள். இருவரும் ஆஸ்ரம் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். இந்த சினேகிதம், தற்போது ஒரு படத்திற்கு கால்ஷீட் கேட்டு படப்பிடிப்புக்கு போகிற அளவுக்கு வளர்ந்திருக்கிறது.
ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் எஸ்.பி.ஹோசிமின். பிறகு பிப்ரவரி 14 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். இடையில் மீண்டும் ஷங்கரின் அழைப்பின் பேரில் சிவாஜி படத்தில் பணியாற்றிய ஹோசிமின், சௌந்தர்யாவிடம் ஒரு கதை சொன்னாராம்.
பளிச்சென்று பிடித்துப் போனது அவருக்கும். இதில் யாரை நடிக்க வைக்கலாம் என்று இருவரும் யோசித்தபோது, மின்னலடித்தாற் போல், நகுலை நடிக்க வைக்கலாம் என்றாராம் சௌந்தர்யா. சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல், நகுலிடம் பேசி, ஹோசிமினையும் அனுப்பி வைத்தார் கதை சொல்ல. ஹோசிமின் போன காரியம் பழம்!
வெங்கட்பிரபு இயக்கத்தில் கோவா படத்தை தயாரிக்கும் சௌந்தர்யா, இதற்கு அடுத்த படமாக இந்த படத்தைதான் தயாரிக்க போகிறார். ஆயிரம் காதல் என்று தலைப்பு வைத்திருப்பதாக கேள்வி.
-மனஸ்வினி |