First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இந்தியா முழுவதும் லாரி ஸ்டிரைக் - விடுதலைப்புலி பிரபாகரனை பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி காங்கிரஸ் கோரிக்கை - ஆனையிறவை சிங்கள ராணுவம் கைப்பற்றியது: , முல்லைத்தீவில் ராணுவம் விமானத்தாக்குதல் - தலை, கழுத்து புற்றுநோயிற்கு சிங்கப்பூரில் மருந்து கண்டுபிடிப்பு - விடுதலைப்புலிகள் வெற்றிபெறுவர் என வைகோ முழக்கம்
ஹாரிஸ் ஜெயராஜின் சந்தோஷம்...
கவனத்தை ஈர்க்கும் புதிய கூட்டணி

கே.வி.ஆனந்த் இயக்கி வரும் அயன் படத்தின் பாடல்கள்தான் இப்போது ஹாரிஸ் Haris jeyrajஜெயராஜுக்கு ஆறுதல். ஜீவாவையும், கவுதமையும் இழந்திட்டேன் என்று கவலைப்பட்டவருக்கு, கே.வி.ஆனந்தின் வருகை சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது.

கோலிவுட், பாலிவுட் ஏரியாக்களின் புகழ் பெற்ற ஒளிப்பதவாளர்களில் முக்கியமானவர் கே.வி.ஆனந்த். முந்தைய படமான கனாக் கண்டேன் படத்தில் இவருக்கு கொடுக்கப்பட்ட பட்ஜெட்டில் ரிச் ஆன ஒரு படத்தை எடுத்துக் கொடுத்திருந்தார். தனது முந்தைய படத்தின் அனுபவங்களை கம்போசிங்கின் போது ஹாரிசுக்கு சொன்னாராம் கே.வி.ஆனந்த். வெளிநாட்டில் படமாக்கப்பட வேண்டிய பாடல் காட்சியன்றை, மஹாபலிபுரம் அருகிலேயே வெளிநாட்டு தரத்துடன் எடுத்திருந்ததையும் போட்டு காண்பித்தாராம்.

கிடைத்ததை வைத்துக் கொண்டு ஜாலம் புரியும், இவருக்கு இப்போது கம்போசிங் கூட வெளிநாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்கிற அளவுக்கு சுதந்திரம். ஹாரிசுடன் அவரது கீ போர்டையும் எடுத்துக் கொண்டு மெக்சிகோ போயிருந்தார்களாம். அலையே இல்லாத அந்த ஊர் பீச்சில் கீ போர்டை வைத்துக் கொண்டு, அலைகள் கால்களை முத்தமிட கம்போசிங் செய்தாராம் ஹாரிஸ்.

தனது இசைக்கு கே.வி.ஆனந்தின் அலங்காரம், ஒன்றை ஒன்று போட்டியிடும் விதத்தில் இருக்கும் என்று சந்தோஷப்படுகிறாராம் ஹாரிஸ். இந்த கூட்டணியாவது முறியாமல் தொடரட்டும்.

-ஆர்.எஸ்.

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter