பூ படத்தில் அமர்க்களமாக நடித்திருக்கிறார் பார்வதி. கோடம்பாகத்தின் புது வரவுகளில் பார்வதியின் வரவு அழகான கோலம்! இப்படியெல்லாம் முன்னணி இயக்குனர்களின் பாராட்டுக்களை அள்ளிக் கொண்டு போனவருக்கு ஒரே ஒரு வருத்தம். இந்த படத்திற்காக இவருக்கு தேசிய விருது கொடுக்க நினைத்தாலும், விதிமுறைகள் விடாது போலிருக்கிறது.
சொந்தக்குரலில் பேசியிருந்தால் மட்டுமே விருது கிடைக்கும். இப்படத்தில் சொந்தக்குரலில் பேசியிருக்கிறாரா பார்வதி? இந்த கதையை உருவாக்கும் போதே, இதற்கு விருது நிச்சயம் என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது சசி. பார்வதியே டப்பிங் பேச வேண்டும் என்று விரும்பினாராம். இதற்கான முயற்சியும் நடந்தது. ஆனால், மலையாள நடிகைகள் தாமே டப்பிங் பேசும்போது எப்படியிருக்கும் என்பதற்கு நவ்யா நாயர், பாவனா, கோபிகா போன்றவர்களே முன்னுதாரணம். இதே நிலைதான் பார்வதி பேசும்போதும் நடந்ததாம்.
இந்த உண்மைகள் தெரியாமல் பத்திரிகையாளர் காட்சியில் பேசிய ஸ்ரீகாந்த், பார்வதி இந்த படத்திலே சொந்தக் குரலில் பேசியிருக்காங்க என்றார். விசாரித்தால் இதில் உண்மை இல்லையாம். பார்வதிக்கு குரல் கொடுத்திருப்பவர் டப்பிங் கலை
ஞி மகா என்பவராம். ஆனாலும், இப்படத்திற்காவது விருது கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் சசி.
-ஆர்.எஸ். |