Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட அலெக்ஸ் பால்மேனன் ஜெயலலிதாவுடன் சந்திப்பு - நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஆ.ராசா பங்கேற்றார் - கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீடுகளில் சிபிஐ ரெய்டு - புதுக்கோட்டை தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன்
விரும்பாமலே விழுந்த சிங்கம்...
- உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள ரஜினி சம்மதம்

ஏறிய பி.பி யை இறக்கிக் கொள்ளலாம்... ஏப்ரல் 4-ந் தேதி நடக்கவிருக்கும் Rajinikanthஉண்ணாவிரதத்தில் ரஜினி, பிரகாஷ்ராஜ், அர்ஜுன் ஆகியோர் கலந்து கொள்ள முடிவு எடுத்திருக்கிறார்களாம். குசேலன் படப்பிடிப்பில் இருந்து சென்னைக்கு திரும்பிவிட்டார் ரஜினி. நேற்றிலிருந்தே தனது அரசியல் நண்பர்களுடன் இந்த உண்ணாவிரதம் குறித்த ஆலோசனையில் அவர் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதில் கலந்து கொள்வது குறித்து அவர் சம்மதம் தெரிவித்துவிட்டாலும், எவ்வளவு நேரம் உண்ணாவிரத பந்தலில் இருப்பது? மீடியாக்களிடம் எது குறித்து பேசுவது? என்பது குறித்தெல்லாம் கடுமையான ஆலோசனைகள் நடந்து வருகிறதாம்.

அரசியலை பொறுத்தவரை காட்சிகள் மாறும் என்பது ரஜினி விஷயத்தில் நூறு சதவீதம் உறுதியாக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் நெய்வேலி அனல் மின் நிலையம் நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலமாக சென்றபோது, அதில் கலந்து கொள்ளவில்லை ரஜினி. இந்த போராட்டத்தால் கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு ஏற்படும் இன்னல்களை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று அவர் சொல்ல, வெகுண்டு எழுந்த அவரது ரசிகர்களே ஆங்காங்கே மன்றங்களை கலைக்க ஆரம்பித்தார்கள். உடனடியாக அவர் மேல் எழுந்துள்ள கசப்பை களைய வேண்டும் என்று முடிவெடுத்த தி.மு.க தரப்பு, மறுநாளே உண்ணாவிரதம் இருக்க ரஜினிக்கு ஐடியா கொடுத்தது. “அங்கே போனா தமிழ்நாட்டுக்காரன் என்கிறார்கள். இங்கே வந்தால் கன்னடத்துக்காரன் என்கிறார்கள். நான் எங்கே போவேன்?” என்று பரிதாபமாக ரஜினியை பேச வைத்ததும் அப்போதுதான்.

இதோ, காட்சி மாறிவிட்டது. ஒகேனக்கல் விஷயத்தில் முதல்வர் கலைஞர் கூறிய கருத்தை அடுத்துதான் இப்படி ஒரு கலவரம் வெடித்திருக்கிறது. கர்நாடகாவில். தொடர்ந்து தமிழர்களுக்கு ஏற்படும் அநீதியை இம்முறை பொறுத்துக் கொள்ள கலைஞரும் தயாராக இல்லை. முன்பு போல் நிலைமை இருந்தால், கலைஞரை நேரில் சந்தித்து இந்த உண்ணாவிரதத்தை தவிர்த்திருப்பார் ரஜினி. நிலைமை இப்போது அப்படி இல்லை என்பதுதான் ரஜினிக்கு நேர்ந்த துரதிருஷ்டம். ஆக, விரும்பாமலே வலையில் விழுந்துவிட்டது சிங்கம்.

மற்ற நடிகர்கள் எப்படி? வெளிநாட்டில் இருக்கிறார் கமல். இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதற்காகவே சென்னை திரும்புகிறார். விமான நிலையத்திலிருந்து உண்ணாவிரத பந்தலுக்கு நேரடியாக வந்துவிடுவாராம். ஆனால், பிற்பகலில்தான் அவர் சென்னைக்கு வரக்கூடிய சூழல் இருப்பதால் மதியம்தான் கலந்து கொள்கிறார். குருவி படத்தின் பாடல் காட்சிக்காக நேற்றே நியூசிலாந்து புறப்பட்டு செல்ல வேண்டிய விஜய், தன் பயணத்தை இந்த உண்ணாவிரதத்திற்காக தள்ளி வைத்திருக்கிறார். பொள்ளாச்சியில் கந்தசாமி படப்பிடிப்பில் இருக்கும் விக்ரம் யூனிட்டை மட்டும் அங்கு விட்டு விட்டு சென்னை வருகிறார். இவர்களே இங்கு வந்துவிட்ட பிறகு ஜோடிகளுக்கு என்ன வேலை? த்ரிஷா, ஸ்ரேயா ஆகியோரையும் உண்ணாவிரத பந்தலில் பார்க்கலாம்.

-ஆர்.எஸ்.

Cine Diary
Cine Diary
Cine Diary
Actress Gallery
Fans Banners
பாலை
பாலை
Srilekha Actress Tamanna Latest Hot Pics Actress Ramya Latest Photos Actress Anushka
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter