வசூல் மழை: சி3க்கு முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்!

தமிழக அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நேற்று ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான சி3 வெளியாகி தற்போது வெற்றி நடை போடுகிறது. தொடர்ந்து தள்ளிப்போன இப்படத்திற்கு நேற்று பலன் கிடைத்துள்ளது. வியாழன்று வெளியான சி3க்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும், கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

சென்னை மற்றும் மற்ற மாநிலங்களிலும் சி3க்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது. சென்னையில் மட்டும் இப்படத்திற்கு ரூ.62 லட்சம் வசூல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் இப்படம் ரூ.6 கோடி வசூல் படைத்துள்ளது என்று வர்த்தகர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். அஞ்சான் படத்திற்கு சூர்யாவின் இப்படம் தான் முதல் நாளில் அதிக வசூல் படைத்துள்ளது. வார விடுமுறை நாட்கள் நெருங்கியுள்ள நிலையில் இன்னும் இப்படத்திற்கு அதிக வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

You might also like More from author