விக்ரமுடன் இணைவதை எண்ணி சிலிர்க்கும் தமன்னா!

சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் புதுப்படத்தில் ‘பாகுபலி’ நாயகி தமன்னா கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

‘வாலு’ பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தில் நடிப்பது குறித்து தமன்னா கூறுகையில், ‘விக்ரம் படத்தில் இணைய ஆர்வமாக உள்ளது. எனது கதாப்பாத்திரம் குறித்து தற்போதைக்கு கூற முடியாது, எனினும், இக்கதை மிகவும் அருமையாக இருந்தது. மார்ச் மாதம் படப்பிடிப்பில் இணைவேன்’ என்று தெரிவித்துள்ளார்.

 தற்போது, பாலிவுட் படமான ‘குயீன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள தமன்னா தெலுங்கில் ‘பெல்லிச்சூபுலு’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை துவங்கிய விஜய் சந்தர் படத்தின் படப்பிடிப்புக்கு இடையே, கவுதம் மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரங்கள்’ படத்திலும் விக்ரம் நடித்து வருகிறார்.

இப்படத்தின் மூலம், பிரபல போஜ்புரி நடிகர் ரவி கிஷான் முதன் முறையாக வில்லன் கதாப்பாத்திரத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவிருக்கிறார். இப்படத்துக்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார்.

You might also like More from author

%d bloggers like this: