கவுதம் கார்த்திக்குடன் இணையும் விஜய் சேதுபதி!

0

வித்யாசமான கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, தற்போது மீண்டும் ஒரு புதிய கதாப்பாத்திரத்தை தேர்ந்தெடுத்துள்ளார்.

அறிமுக இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் இரண்டு கதாநாயகர்கள் கொண்ட கதையில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவருடன் ‘கடல்’ நாயகன் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கவிருக்கிறார்.

 மாணவன் மற்றும் பழங்குடியினர் தலைவன் என 2 பேரை மையமாக கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் படமாக்கப்படவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.