‘பேரன்பு’ படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குனர் வசந்த்

‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘தரமணி’ என்ற படங்களுக்குப் பிறகு இயக்குனர் ராம் நடிகர் மம்முட்டியை வைத்து உருவாக்கியுள்ள படம்தான் ‘பேரன்பு’.

ஆனால் ‘பேரன்புடன்’ என்ற பெயரில் ஒரு குறும்படம் ஒன்று சமீபத்தில் திரையிடப்பட்டது. பார்த்தவர்களின் மனதை உருகச் செய்த அந்தப் படத்தைப் பற்றிப் பலரும் பாராட்டினார்கள்.

இதில் கலந்துகொண்ட இயக்குநர் வசந்த், “ஆட்டிசம் விழிப்புணர்வு குறித்த ‘பேரன்புடன்’ என்கிற மிக அற்புதமான இந்தக் குறும்படம் மிகப்பெரிய அளவில் கொண்டு செல்லப்பட வேண்டும். இணையதளத்தில் பதிவேற்றுவதற்கு முன்பாக இந்தக் குறும்படத்தை உலகத் திரைப்பட விழாக்களிலும் கலந்துகொள்ளச் செய்யுங்கள்.. அதற்கு எந்தவகையிலும் உதவி செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். இந்த தெய்வக் குழந்தைகளின் ஒவ்வொரு நிமிடங்களையும் மதித்து அவர்களுடன் மகிழ்ச்சியாக கழித்துவரும் பெற்றோர்களை பார்க்கும்போது அவர்களின் கால்களில் விழுந்து வணங்க தோன்றுகிறது” என்று நெகிழ்ச்சியாக பேசினார்.

You might also like More from author

%d bloggers like this: