ஸ்டெர்லைட், காவிரி மேலாண்மை விவகாரம் – களத்தில் குதித்த நடிகர் சங்கம்

தியேட்டர் அதிபர்களின் அராஜகத்தை ஒழிக்க தயாரிப்பாளர் சங்கம் ஒரு மாத காலமாக ஸ்ட்ரைக் செய்து வருகிறது. இதற்காக பேரணி நடத்தி முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு அது மறுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழ் நாட்டில் ஸ்டெர்லைட், காவிரி மேலாண்மை விவகாரங்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. இதனால் நடிகர் சங்கம் கண்டன அறவழிப் போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறது.

அந்தப் போராட்டம் வருகிற 8 ஆம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற இருக்கும் இந்தப் போராட்டம், கண்டன அறவழிப் போராட்டமாக நடைபெற இருப்பதாகத் தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் இந்தப் போராட்டத்தில் திரைத்துறையைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொள்ளும்படி நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

You might also like More from author

%d bloggers like this: