‘’தமிழ் நாடா குப்பைத் தொட்டியா…?’’ – கொந்தளித்த சதீஷ்

இப்போது தமிழ் நாட்டில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினைதான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம். உலக நாயகன் கமல் நேரில் சென்று அம்மக்களின் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் காமெடி நடிகர் ஸ்டெர்லைட் பற்றி தனது கோபத்தை டிவிட்டரில் கொட்டியுள்ளார்.

“லண்டன்ல இருக்கும் ஒரு பிசினஸ்மேன், ஆஸ்திரேலியாவுல இருந்து தாதுப்பொருளைத் தூத்துக்குடிக்கு எடுத்துவந்து, அதை சுத்த தாமிரமா மாத்தி, கவர்மெண்டுக்கு காசும், எங்களுக்கு கேன்சரும் கொடுத்துட்டுப் போறதுக்குப் பெயர்தான் ஸ்டெர்லைட். இது தமிழ்நாட்டுக்கு மட்டும் இருக்கிற பிரச்சினை அல்ல. இந்தியாவுக்கே அவமானம். எங்கள் நாடு என்ன குப்பைத் தொட்டியா…?” என ட்விட்டரில் கொதித்துள்ளார் சதீஷ்.

You might also like More from author

%d bloggers like this: