‘’ஆள விடுப்பா அட்லீ…!’’ – கிளம்பச் சொன்ன விஜய் கடுப்பான அட்லீ

விஜய் டிவியில் பெரிய பொசிஷனில் இருப்பவரின் உறவினர், ஷங்கரின் உதவியாளர் என்ற இரண்டு பெரிய அடையாளங்களுடன் இயக்குனரானவர் அட்லீ. ‘ராஜா ராணி’ என்ற ஒரு படம் ஹிட்டாக, ஏற்கனவே இருந்த இவரின் அலப்பறை அதிகமானது. விஜய்யை வைத்து ‘தெறி’ என்ற படு சுமாரான படத்தைக் கொடுத்துவிட்டு ஏதோ ஷங்கர், முருகதாஸ் ரேஞ்சிற்குத் தன்னை பெரிய இயக்குனர் போல இவரே பாவித்துக் கொண்டு அலட்டல் பேட்டிகளை கொடுத்தார்.

மூன்றாவது படமாக விஜய்யை வைத்து ‘மெர்சல்’ என்ற படத்தைக் கொடுத்தார். ஆதாம் ஏவாள் காலத்துப் பழைய கதை என்பதால் ஆடியன்ஸ் இப்படத்தை நிராகரித்தனர். பிஜேபியின் ஆதரவால் சுமாராக ஓடியது. தயாரிப்பாளர் தலையில் துண்டு விழுந்து அடுத்தடுத்த படங்களை எடுக்க முடியாமல் போனது. ‘மெர்சல்’ மெகா ஹிட் என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கும் ஒரே ஜீவன் நம்ம அட்லீதான்.

‘மெர்சல்’ தயாரிப்பாளரின் நிலையை உணர்ந்த மற்ற தயாரிப்பாளர்கள் அட்லீ மேல் கடுப்பில் இருக்க, அட்லீயோ மீண்டும் விஜய்க்கே தூண்டில் போட்டார். ஆனால் எப்போதுமே தயாரிப்பாளர்களின் நலன் கருதும் விஜய் அட்லீயை திருப்பி அனுப்பி விட்டாராம்.

இதனால் விஜய் மேல் கடுப்பான அட்லீ தெலுங்கில் பிரபாசை இயக்க முயற்சி செய்கிறாராம்.

You might also like More from author

%d bloggers like this: