விஜய் சேதுபதி மடோனா செபாஸ்டின் ஹாட்ரிக் கெமிஸ்ட்ரி

தமிழில் வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் சேதுபதி ‘சூது கவ்வும்’ படத்திற்குப் பிறகு நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்த படம்தான் ‘காதலும் கடந்து போகும்’. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டின் நடித்திருந்தார். படத்தை விட இந்த ஜோடி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

அதேபோல் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘கவண்’ படத்திலும் விஜய் சேதுபதி மடோனா செபாஸ்டின் ஜோடியின் கெமிஸ்ட்ரி நன்றாகவே எடுபட்டது. இந்நிலையில் விஜய் சேதுபதி கோகுல் இயக்கத்தில் ‘ஜுங்கா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாயிஷா சைகல் நடித்து வருகிறார்.

ஆனால் இன்னொரு ஹீரோயினாக மடோனா செபாஸ்டின் நடித்து வருகிறார். மற்ற படங்களைப் போலவே இந்த ஜோடி இப்படத்திலும் ஹாட்ரிக் ஹிட்டடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like More from author

%d bloggers like this: