‘அக்கட’ ஹீரோவுக்கு தூண்டில் போட்டுக் கவிழ்த்த அட்லீ

காப்பியடிக்கும் பல இயக்குனர்கள் ஹாலிவுட் படங்களிலிருந்தும், கொரியன் படங்களிலிருந்தும் சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இயக்குனர் அட்லீயோ கொஞ்சமும் கூட கூச்சமே இல்லாமல் தமிழில் வெளிவந்து ஆறு வயது குழந்தை முதல் அறுபது வயது முதியவர்கள் வரை கண்டு களித்துக் கொண்டாடிய சூப்பர் ஹிட் தமிழ்ப் படங்களை அப்பட்டமாகக் காப்பியடிப்பார்.

ஆனால் ‘ராஜா ராணி’, ‘தெறி’ என வசூலைக் குவிப்பதில் அட்லீ கில்லிதான். ஆனால் அவர் இயக்கிய ‘மெர்சல்’ வெற்றிப் படம் என்றாலும் அட்லீயின் அலட்சியப் போக்கினால் படத்தின் பட்ஜெட் பல மடங்கு அதிகமாகி, தயாரிப்பாளருக்கு நஷ்டம் தந்தது. இதனால் பல தயாரிப்பாளர்கள் அட்லீக்கு படம் தரக் கூடாது என்று வெளிப்படையாகவேப் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழில் நம் பருப்பு வேகாது என்று தெரிந்துகொண்ட அட்லீ ஆந்திர ஹீரோக்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் வலை வீசி ஒரு மாஸ் ஹீரோவையும் பிடித்து விட்டாராம். அதுபற்றிய தகவல் விரைவில் வருமாம்.

You might also like More from author

%d bloggers like this: