சினிமா உலகினர் பேரணி அனுமதி மறுத்த அரசு

கடந்த ஒரு மாத காலமாக சினிமாவிற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தயாரிப்பாளர் சங்கம் மும்முரமாக இருக்கிறது. ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் திருந்தாத நிலையில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி தொழிலாளர் அமைப்பு என சினிமா அமைப்புகள் ஒன்று சேர்ந்து வரும் புதன் அல்லது வியாழன் கிழமை பேரணி ஒன்று நடத்தி அதன் மூலம் முதல்வரை சந்தித்து தயாரிப்பாளர் சங்கப் பிரச்சினையை தீர்த்து வைக்கக் கோரிக்கை வைக்கப் போவதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்தார்.

ஆனால் தற்போது பேரணி நடத்துவதற்கு அரசு அனுமதி மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் முதல்வரிடம் பிரச்சினையை வேறு விதமாகக் கொண்டு போக வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் யோசித்து வருகிறது.  

You might also like More from author

%d bloggers like this: