மலர் டீச்சரைக் காதலிக்கும் சிவகார்த்திகேயன்

‘ப்ரேமம்’ என்ற ஒரே படத்தின் மூலம் மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்கள் அனைவரின் நெஞ்சங்களிலும் குடிபுகுந்தவர் சாய் பல்லவி. தெலுங்கில் சில படங்களில் நடித்தவர் தமிழில் ‘கரு’ படத்தில் அறிமுகமாகியுள்ளார். ‘மாரி 2’, ‘NGK’ படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் சாய் பல்லவி. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில்தான் சாய் பல்லவி ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

இதிலும் வழக்கமாக ஹீரோயினை துரத்தி துரத்திக் காதலிக்கும் கேரக்டராம் சிவகார்த்திகேயனுக்கு.

You might also like More from author

%d bloggers like this: