‘’பெரிய ஹீரோக்களின் சம்பளத்தைக் குறைப்பதைவிட இதை செய்யுங்கள்’’ – சிம்பு ஆவேசம்

தயாரிப்பாளர் சங்கம் நடத்தி வரும் ஸ்ட்ரைக் தொடர்பாக இயக்குனர் சங்கத்துடன் நேற்று பேச்சு வார்த்தை நடந்தது. இதில் தானும் ஒரு இயக்குனர் என்பதால் சிம்புவும் அதில் கலந்துகொண்டார்.

அதில் பேசிய சிம்பு, “தமிழ் சினிமாவில் இருப்பதே 10 பெரிய நடிகர்கள் தான். கடவுள் புண்ணியத்தில் அதில் நானும் ஒருவன். அவர்களின் சம்பளத்தைக் குறைப்பதால் மட்டும் ஒன்றும் ஆகிவிடாது.

நீங்கள் ஏன் கறுப்பு பணத்தில் சினிமா எடுக்கிறீர்கள்? அனைத்தையும் வெள்ளையில் கொடுத்து, ஒழுங்காக வரிகட்டி கணக்கு காட்டுங்கள். ஒரு தயாரிப்பாளர் எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறார், எவ்வளவு வட்டி கட்டுகிறார் என்பது அந்தப் படத்தில் நடிக்கும் ஹீரோவுக்குத் தெரிய வேண்டும். கறுப்புப் பணத்தை ஒழியுங்கள். அனைத்துமே சரியாகிவிடும்என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.

You might also like More from author

%d bloggers like this: