கமல்ஹாசனுடன் கிறிஸ்டோபர் நோலன் சந்திப்பு

இந்தியாவிலேயே ஹாலிவுட் தர புகழ் பெற்றவர்தான் உலக நாயகன் கமல்ஹாசன். அதேபோல் தனது படங்கள் மூலம் இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்தவர்தான் கிறிஸ்டோபர் நோலன். இந்நிலையில் கமல்ஹாசனும், கிறிஸ்டோபர் நோலனும் சந்திக்கவிருக்கிறார்கள்.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்த ‘டன்கிரிக்’ படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங்கை அடுத்த மாதம் இந்தியாவில் செய்யவுள்ளார் நோலன். அந்த நிகழ்வில் கலந்துகொள்ள கமல்ஹாசனுக்கு கிறிஸ்டோபர் நோலன் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் ஒரு இந்தியனாக கமல் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து ரசிகர்களுமே உற்சாகத்தில் உள்ளனர்.

You might also like More from author

%d bloggers like this: