விக்னேஷ் சிவன் இன் ராஜேஷ் அவுட் சிவகார்த்திகேயன் பட அப்டேட்

தயாரிப்பாளர் ஞாவேல்ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க சில வருடங்களுக்கு முன் கால்ஷீட் கொடுத்திருந்தார். அந்தப் படத்தை சிவா இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் மீண்டும் அஜித்தை இயக்க சென்று விட்டார். அப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக முடிவானது.

ஆனால் இப்போது விக்னேஷ் சிவன் அப்படத்திலிருந்து விலகிவிட்டார். விக்னேஷ் சிவன் கதை பண்ண நேரம் அதிக நேரம் வேண்டும் என்பதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அப்படத்தின் இயக்குனராக ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். இன்று நேற்று நாளை முடிந்தவுடன் இப்படம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like More from author

%d bloggers like this: