‘சூர்யா 37’ படத்தின் அப்டேட்ஸ்!

சூர்யா தற்போது தனது 36வது படமான ‘என்ஜிகே’ படத்தில் செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அண்மையில் வெளியிடப்பட்டது.

அதன்படி அப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாத இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படப்பிடிப்புக்காக 10 நாடுகளுக்கு சூர்யாவை அழைத்து செல்ல இருக்கிறாராம் இயக்குனர் கே.வி.ஆனந்த்.

You might also like More from author

%d bloggers like this: