மீண்டும் கைகோர்க்கும் சூர்யா கே.வி.ஆனந்த்!
சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கப்போவதாக கே வி ஆனந்த் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
சூர்யா தற்போது என்ஜிகே படத்தில் நடித்து வருகிறார். செல்வராகவன் இயக்கும் இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவது கே வி ஆனந்த் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கே வி ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவிருக்கிறார் . லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. அயன், மாற்றான் படங்களுக்கு பிறகு மீண்டும் சூர்யா, கே வி ஆனந்த் கூட்டணி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.