ஸ்ரீதேவி 16-ஆம் நாள் நினைவஞ்சலி… அஜித்-ஷாலினி கலந்து கொண்டனர்!

நடிகை ஸ்ரீதேவி சில தினங்களுக்கு முன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதகாக சென்ற போது அங்கு உயிரிழந்தார்.

ஸ்ரீதேவியின் மறைவு இந்திய திரையுலகமே அஞ்சலி செலுத்தியது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 16-ஆம் நாள் நினைவஞ்சலி நிகழ்ச்சி சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது. ஸ்ரீதேவியின் குடும்ப வழக்கப்படி நடைபெற்ற இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில், நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் பங்கேற்றார்.

மேலும், நடிகர்கள் சூர்யா, கார்த்திக், விஜயகுமார் மற்றும் நடிகைகள் லதா, ஸ்ரீபிரியா, மீனா, பாடகி பி.சுசீலா உள்ளிட்டோரும் இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்கள் ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

You might also like More from author

%d bloggers like this: