‘காலா’ ஏப்ரல் ரிலீஸ் கேள்விக்குறி

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி ரிலீஸ் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கட்டிருந்தது. ஆனால் சொன்ன தேதியில் ‘காலா’ ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை என்று அடித்துச் சொல்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

காரணம் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிரான சினிமா தயாரிப்பாளர்கள் சங்கமும், அரசாங்கத்திடம் கோரிக்கைகளை நிறைவேற்றச் சொல்லி தியேட்டர் உரிமையாளர் சங்கமும் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த ஸ்ட்ரைக் ஏப்ரல், மே மாதம் வரை நீடிக்கும் என்று உறுதியான தகவல்கள் வருகின்றன. இதனால் ‘காலா’ ஏப்ரல் ரிலீஸ் சாத்தியமே இல்லையாம்.

You might also like More from author

%d bloggers like this: