இறங்கி அடிக்கும் சசிகுமார் விரைவில் ‘சுந்தர பாண்டியன் 2’

‘தாரை தப்பட்டை’ என்ற ஒரே படத்தின் மூலம் பெரும் கடனாளியான இயக்குனர் சசிகுமார் தற்போது முன்பை விட பல மடங்கு வேகத்தைக் கூட்டியுள்ளார். சமுத்திர கனியின் ‘நாடோடிகள் 2’ படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். வரும் ஏப்ரல் 13ஆம் தேதி அவர் நடித்த ‘அசுரவதம்’ ரிலீஸாகிறது.

இந்நிலையில் சசிகுமாருக்கு மிகப் பெரும் வெற்றிப் படமாக அமைந்த ‘சுந்தர பாண்டியன்’ படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் தொடங்கவிருக்கிறதாம். இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபாகரனே இயக்க, சசிகுமாருடன் பல முன்னணி நடிகர்களும் நடிக்கவுள்ளார்களாம்.

சுந்தர பாண்டியனில் விஜய் சேதுபதிதான் வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது.  

You might also like More from author

%d bloggers like this: